×

மதுக்கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க கோரிக்கை

பெரம்பலூர்,அக்.15: பெரம்பலூர் மாவட்டத்தில் விரை வாக மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் பாதி யாகக்குறைக்க வேண்டும். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அப் போது லெப்பைக்குடிகாடு பகுதியில் இயங்கி வரும், பெரம்பலூர் மாவட்ட மனித நேய ஜனநாயகக் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் முஜிப் ரகுமான் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த நபர்கள் ஒன்று திரண்டு, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பாக, காந்தி பிறந்த 150வது பிறந்தநாளான அக்டோபர் 2-ம்தேதி முதல், வருகிற 15ம் தேதி வரை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், மதுஎதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் தமிழக முதல்வர், முதல்வராகப் பொறுப் பேற்றவுடன், படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டின் புள்ளி விபரப்படி 34மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

ஆனால் இதுவரை அந்த கடைகளின் எண்ணிக்கை ஒன்றுகூட குறைந்த பாடில்லை. இதன் காரணமாக மதுவுக்கு அடிமையாகி, உயிரிழந்த நபர்களின் குடும்பங்களிலிருந்து, விதவைகள் உதவித்தொகை கேட்கின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த படி தான் உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் விரைவாக மதுக்கடைகளி ன் எண்ணிக்கை பாதியாக குறைக்கவும், பூரண மதுவிலக்கு என்றக் கோரிக்கை யை அரசுக்குத் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Tags : liquor shops ,
× RELATED கன்னியாகுமரியில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல்