×

4 முறை மனு கொடுத்தும் கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து கூட்ட அரங்கில் பெண் உள்பட 4 பேர் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா

பெரம்பலூர்,அக்.15: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கூட்ட அரங்கில் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு பேரூராட்சியிலுள்ள காயிதே மில்லத் நகரில் வசித்து வரும் லைலா (32) என்பவர் தனது கணவர் அபுதாகீர் (39), கணவரின் அண்ணன் முகமது இக்பால்(42), கணவரின் தம்பி ஜாபர் சாதிக் (28) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகக் குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் வந்தார். நேராக சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவைக் கொடுக்காமல், கூட்ட அரங்கின் மையத்திலேயே அலு வலர்கள் எதிர்பாராத நிலையில், 4பேரும் தரையில் அமர்ந்து கொண்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை எழுந்து வந்து மனுக்களைக் கொடுக்கும் படி, மாவட்ட வருவாய் அலுவலரோடு மனுக்களைப் பெற்றுக் கொண்டி ருந்த அதிகாரி ஒருவர் அழைத் தார். இதனால் லைலாவின் கணவர் அபுதாகீர் ஆவேசமடைந்து, ஏற்கனவே இதே அலுவலகத்தில் இருமுறை தர்ணா போராட்டம் நடத்தி மனு கொடுத்துள்ளேன். என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். மங்கலமேடுபோலீசில் மனு கொடுத்தோம் நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் 4முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எஸ்பி அலுவலகத்தில் மனுகொடுத்தும் நடவ டிக்கை இல்லை. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒரு அதிகாரிகூட இந்த மாவட்டத்தில் இல் லையா. மீண்டும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், நடு கூட்ட அரங்கில் குடும்பத் தோடு தீக்குளிப் போம் என சத்தமாக முறை யிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து மனுவைக் கொடுத்து விட்டு எழுந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்ட தன் பே ரில் மனுவைக் கொடுத்து விட்டு வெளியேறினர்.அந்த மனுவில் தனது நாத்தனார் கணவர், நாத்த னார், மாமனார் உள்ளிட்ட 4பேர் கொடுமை செய்வதால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

நீதிபதிகள் பரிந்துரைத்தும்
கண்டுகொள்ளாத எஸ்பி...

இந்தப் புகார் தொடர்பாக, லைலா கடந்த மாதம் 19ம்தேதி கொடுத்தப் புகாரின்பேரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன் மை அமர்வு நீதிபதியுமான (பொ) மலர்விழி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சார்பு நீதி பதியுமான வினோதா ஆகியோர் லைலா கொடுத் தப் புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் எஸ்பிக்கு பரிந்துரைத்தும் 3வாரங்களாக எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இது பிரச்னைக்குத் தீர்வு காண முன்வராத காவல் துறையே மனுதாரர்களின் மன உளைச்சலுக்கு முக்கி யக் காரணமாக இருக்கி றது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

Tags : meeting hall ,
× RELATED புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில்...