×

ஓய்வு அதிகாரி வீட்டில் 12 பவுன் கொள்ளை

திருவில்லிபுத்தூர், அக்.15: திருவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது வன்னியம்பட்டி. இங்கு ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வருபவர் சண்முகம் (63). வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி. இவர் தனது மனைவியுடன் கடந்த 11ம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,retirement officer ,home ,
× RELATED தொடர் கொள்ளை; 2 பேர் கைது