×

வெடிகுண்டுகளை செயலிழக்க ெசய்ய போலீசார் முடிவு

திருவில்லிபுத்தூர் அக்.15: திருவில்லிபுத்தூரில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க போலீசார் முடிவு ெசய்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலையத்துக்கு பின்புறம் வேளாங்குளம்  கண்மாயில் சுமார் 10 வெடிகுண்டுகள் நேற்று முன்தினம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக படிக்காசு வைத்தான்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அழகுராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகள் நத்தம்பட்டி பகுதியில் உள்ள வெடிமருந்துகள் பாதுகாக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையில் உள்ள வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் கூறுகையில், வெடிகுண்டுகள் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனை செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Tags :
× RELATED தொழில்நுட்ப கோளாறு...