×

சேத்தூர் மக்கள் மனு மாவட்டம் அதிகாலை அழகு ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மீது நில ஆக்கிரமிப்பு புகார்

விருதுநகர், அக்.15: ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஆக்கிரமித்த அரசு மற்றும் தனியார் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த மனுவில், விருதுநகர் சிவகாசி ரோட்டில் எனது தாயார் பாண்டியம்மாள் பெயரில் 2011ல் இடம் வாங்கினோம். எங்களது இடத்திற்கு பின்புறம் அரசு ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. அதற்கு பின்னால் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ராம்ராஜ்  நிலம் உள்ளது. ராம்ராஜ் நிலத்தின் மூலப்பத்திரம், கிரையப்பத்திரங்களில் நான்கு மால்கள் தவறாக உள்ளதால் பத்திரப்பதிவுத்துறை அவரது பத்திரம் மறுவிற்பனைக்கு தடை செய்துள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் அரசு ஓடை புறம்போக்கு மற்றும் பாண்டியம்மாள் பெயரில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி போட்டு விற்பனை செய்ய முயன்று வருகிறார். இந்த அடாவடி செயலுக்கு விஏஓ விஜயகுமார் உடந்தையாக இருந்துள்ளார்.  விருதுநகர் தாசில்தார் அளித்த சான்றில் பாண்டியம்மாள் நிலத்திற்கும், ராம்ராஜ் நிலத்திற்கு இடையே அரசு ஓடை புறம்போக்கு நிலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்று வரை ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் ஆக்கிரமித்த அரசு நிலம், பாண்டியம்மாள் நிலத்தை மீட்க முடியவில்லை. இதுவரை 9 மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் என்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். மாவட்ட நிர்வாகம் இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் ஆக்கிரமித்துள்ள அரசு ஓடைபுறம்போக்கு மற்றும் பாண்டியம்மாள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : inspector ,Chetur People Manu District ,
× RELATED கீழ்ப்பாக்கத்தில் தயிர்...