×

வாகன ஓட்டிகள் அவதி இ- சேவை மையம் மீண்டும் திறக்கப்படுமா?

கம்பம் அக்.15: கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன.  ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கம்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் கடந்த சில வருடங்களாக இயங்கி வந்தது. இடையில் ஓரிரு மாதங்கள் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென கடந்த 3 மாதத்துக்கு முன்பு  எந்த முன்னறிவிப்புமின்றி அரசு இ-சேவை மையம் செயல்பாடு நிறுத்தப்பட்டது. கம்பத்தை  சுற்றியுள்ள கே.கேபட்டி, நாராயணதேவன்பட்டி, சுருளிப்பட்டி, புதுப்பட்டியிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இ- சேவை மையத்தில் தான். வாக்காளர் அடையாள அட்டை எடுத்து வந்தனர். தற்போது தனியார் இ- சேவை மையத்தை நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு அதிக பணம் வசூலிக்கப்படுவதுடன் வீண் அலைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே, மீண்டும் அரசு இ - சேவை மையத்தை கம்பத்தில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Motorists ,Avadi ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!