×

காமராஜபுரம் மலைக்கிராமத்தில் ஆமை வேகத்தில் தார்ச்சாலை பணி

வருசநாடு, அக்.15: வருசநாடு அருகே காமராஜபுரம் மலைக் கிராமச்சாலை ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுவருகின்றனர். வருசநாடு அருகே காமராஜபுரம் மலைக்கிராமத்தில்  ஆறு மாத காலமாக தார்ச்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும், நடந்து செல்லும்போதும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும், ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதற்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சாலைப் பணியை மேற்ெகாள்ளும் அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தேனி கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக காமராஜபுரம் மலைக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தங்கபெருமாள் கூறுகையில்,`` கடந்த ஆறு மாத காலமாக தார்ச்சாலை பணியை ஆமை வேகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் வண்டி, வாகனங்கள் செல்வதற்கு பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் வாகனங்களின் டயர்களை ஜல்லி கற்கள் பதம் பார்த்து வருகிறது. மேலும் தார்ச்சாலை பணி மிகவும் தரமற்ற முறையில் உள்து.  எனவே, விரைந்து தரமாகவும், விரைவாகவும்  தார்ச்சாலை பணியை செய்து முடித்திட வேண்டும்’’ என்றார்

Tags : Turtle Speed ,
× RELATED தூத்துக்குடி துறைமுக சாலையில்...