×

திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 அதிமுகவினர் மீது வழக்கு

திருப்புத்தூர், அக். 15:  திருப்புத்தூர் அருகே ஆபத்தாரணப்பட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய அதிமுகவை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்புத்தூர் அருகே ஆபத்தாரணப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் அதிமுக 49ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 16 காளைகள் களத்தில் இறங்கின. ஒரு குழுவில் 9 பேர் வீதம் 16 குழு மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த வடமாடு மஞ்சுவிரட்டு அரசு அனுமதியில்லாமல் நடத்தப்பட்டதாக ஏரியூர் குரூப் விஏஓ ஜெயமுருகன் திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில், இ.வலையபட்டியைச் சேர்ந்த மாணிக்கம், ராமச்சந்திரன், பாண்டி, டி.மாம்பட்டியை சேர்ந்த கருணாநிதி, செல்வம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : persons ,Manchuvratu ,Thiruputhur ,
× RELATED புதுச்சேரிக்குள் வந்து நோய்...