×

சிங்கம்புணரியில் மழை வேண்டி புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி, அக்.15:  சிங்கம்புணரியில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சேவுகபெருமாள் அய்யனாருக்கு புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மண் புரவி செய்யப்பட்டு சந்திவீரன் கூடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுவாக புரட்டாசி மாத பவுர்ணமியில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழா நடைபெறுகிறது. புரவி எடுப்பு  திருவிழாவை முன்னிட்டு சேவுகப் பெருமாள் கோவிலிலிருந்து வெள்ளி புரவி சந்திவீரன் கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இரவு 11 மணிக்கு மண் புரவி, வெள்ளி புரவிகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் இரண்டு புரவிகளையும் சுமந்து பெரிய கடை வீதி வழியாக சேவுகப் பெருமாள் கோவில் அடைந்தது. அங்கு அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு நாட்டரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்கள்  யாரும் இல்லாத நிலையில் பூட்டப்பட்டிருந்துள்ளது. விபத்து ஒன்றில் முதலுதவி  சிகிச்சை செய்வதற்காக இரவு 10 மணிக்கு சென்றவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம்  பூட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர். பின்னர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துள்ளனர்.

Tags : Rain shower ceremony ,Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...