×

மாவட்டம் டெங்குவை கட்டுப்படுத்த மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

சாயல்குடி, அக்.15: கடலாடியில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து கடலாடி அரசு மருத்துவமனை, காவல்நிலையம், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, இன்ஸ்பெக்டர் ராணி முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் பார்வதி வரவேற்றார். டெங்கு கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சலை தடுக்கும் முறைகள் குறித்து செயல் முறையுடன் விளக்கி பேசினர். ஊராட்சி செயலர் முனீஸ்வரன் நன்றி கூறினார். இதுபோல் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி இயக்குனர் சசிகலா தலைமை வகித்தார். கடலாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் முத்துக்குமார் தலைமை வகித்தார். துணை தாசில்தார்கள் இந்திர ரஞ்சித், காதர்முகைதீன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், டிரைவர்கள், பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கப்பட்டது.

Tags : district ,
× RELATED மாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா