×

குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு இடையூறான சாலை

தொண்டி, அக்.15: தொண்டி புது பஸ் ஸ்டாண்ட் ரோடு மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்திற்கு ஏதுவாக இல்லாத இச்சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வட்டணாம் ரோடு வரையிலும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. பஸ் உள்ளே நுழையும் வழியும் வெளியே வரும் வழியும் பள்ளமாக உள்ளது. எப்போதும் இதில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பேரூராட்சி நிர்வாகம் இச்சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல முறை மனு கொடுக்கப்பட்டது. மேலும் தற்காலிக முடிவு எடுக்காமல் நிரந்தர முடிவாக புதிய ரோடு போட்டுத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொண்டியை சேர்ந்த செய்யது அலி கூறியது, ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பள்ளமாக ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : road ,
× RELATED தமிழகத்தில் அமலில் உள்ள இபாஸ் முறையை...