×

பரமக்குடி நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரால் நோய் ஆபத்து

பரமக்குடி, அக்.15: பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் செல்வதற்கான வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்ட வில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பரமக்குடி நகர் பகுதியில் 5 கி.மீ. தூரம் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பகுதியில் கோயில், சர்ச், மசூதிகள் மற்றும் நான்கு மேல்நிலை பள்ளிகளும் உள்ளது. இதனால் தினமும் 2 ஆயிரம் வாகனங்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் வந்து செல்கின்றனர். மழை காலங்களில் அந்த பகுதிகளில் வாறுகால் நிறைந்து தெருசாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு வரும்.
கழிவுநீர் முறையான வாறுகால் இல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ,மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து வரும் நிலை உள்ளது. இரண்டு நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது தண்ணீரை வாரியிறைத்து கொண்டு செல்வதால் வியாபாரிகளும், பொருள் வாங்க வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக வாறுகாலில் அடைத்துள்ள அடைப்பை முழுமையாக அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டு வருகிறது. இதனால் மழை காலங்களில் நகர் பகுதிகளுக்குள் இருக்கும் வாறுகால் உடைத்து தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. இதுபற்றி நகராட்சி, கலெக்டர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் நலத்தின் மீது அக்கறையில்லாமல் அலட்சியத்துடன் அதிகாரிகள் செயல்படுவது பொதுமக்களிடம் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

Tags : Paramakudi Highway ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை