×

மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை அறையில் திடீர் தீ

மதுரை, அக்.15: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கதிரியக்க சிகிச்சை அறையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு ரேடியோ தெரபி (கதிர் வீச்சு) சிகிச்சை கொடுக்கப்படுகிறது. நேற்று காலை ஒரு பெண் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது அந்த அறையில், டாக்டர் ஒருவரும், டெக்னீசியன்கள் இருவரும், ேரடியோ தெரபி பயிற்சி மாணவ-மாணவியரும் இருந்தனர். அப்போது அந்த அறையில் உள்ள ஏசி மிஷினில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, வயர்கள் தீ பிடித்து எரிந்ததால் அந்த அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளி உள்ளிட்ட அனைவரும் அலறியடித்துக்ெகாண்டு வெளியில் ஓடிவந்தனர். மேலும் கதிரியக்க சிகிச்சைக்காக அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்த 20க்கும் மேற்பட்டேரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தனியார் நிறுவன ஊழியர்களும் மருத்துவமனை ஊழியர்களும் தீயணைப்பு கருவியை கொண்டு வந்து தீயை அனைத்தனர். உடனே டீன் வனிதா, மருத்துவக் கண்காணிப்பாளர் சங்குமணி நிலைய மருத்துவ அதிகாரிகள் லதா, சுபா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இச்சம்பவத்தால் 51வது வார்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ரேடியோதெரபி சிகிச்சை நிறுத்தம்
தீ விபத்து ஏற்பட்ட ஏசி மிஷினில் இருந்து ரேடியோ தெரபி இயந்திரத்திற்கு செல்லும் வயர்களும் தீயில் கருகியதால், அனைத்தையும் மாற்ற வேண்டும். புதிய ஏசி மிஷினை பொருத்தி, அனைத்து வயர்களையும் மாற்ற ஓரிரு தினங்கள் ஆகலாம். அதுவரை ரேடியோதெரபி சிகிச்சை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.


Tags : fire ,Madurai Government Cancer Radiotherapy Room ,
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...