×

தமிழகத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட வேண்டும் கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

மதுரை, அக். 15: தமிழகத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளின் முடிவுகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மதுரை மாவட்ட 11வது மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கவிஞர் செல்லா வரவேற்றார். மாவட்ட செயலாளர் பேரா.ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமைக்குழு உறுப்பினர் பேரா.தி.சு. நடராசன் தலைமை வகித்தார். தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் மாநாட்டை துவக்கி வைத்தார். பேரா.போத்திரெட்டி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தினர். எழுத்தாளர் கர்ணன், வக்கீல் சாமித்துரை, முருகேச பாண்டியன், திருச்சி சந்தர், கவிஞர் சக்தி ஜோதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை வரதராசன் பாராட்டினார்.  பேனா மனோகரன் தலைமையில் கவிஞர்கள் முத்தையா, ரோசா முத்தையன், தமிழ் சிவா, வளரி சுந்தர்ராசன் ஆகியோர் கவிதை பாடினர்.

பேரா.அழகுபாரதி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில், படைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும். கீழடி அகழாய்வைத் தொடர்வதுடன், அங்கு கிடைத்த பொருட்களை  காட்சிப் படுத்த வேண்டும். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர்,  பொருந்தல், கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட அகழாய்வுகளின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கான யூஜிசி விதிகளை பின்பற்ற வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின்பும் காதல்
ரேவதியும், அருணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ரேவதிக்கு திருமணம் ஆன பிறகும் அருண் காதலித்து வந்துள்ளார். இதனால் அருண் ரேவதியை அடிக்கடி அவருடைய வாட்ஸ் ஆப் இல் தொடர்பு கொண்டு வந்துள்ளார். இதனடிப்படையில் வாட்ஸ் ஆப் மூலம் நான் உனக்கு வாழ்வு தருகிறேன். நீ உன் கனவனை விட்டுவிட்டு வந்துவிடு. அதற்கு முதலில் உன் வயிற்றில் உள்ள கருவை கலைத்து விடு என கூறி கருகலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதை வைத்தே ரேவதியின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...