×

பேரிடர் விழிப்புணர்வு பேரணி

மதுரை, அக். 15: மதுரை மேற்கு தாலுகா சார்பில் பேரிடர் தணிக்கை நாளை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறை சார்பாக நேற்று நாகமலைபுதுக்கோட்டையில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு தாசில்தார் கோபி தலைமை வகித்தார் இதில் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், தீயணைப்புத்துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்பு பேரணி முடிவில், வெள்ளச் சேதம் பேரிடர் ஏற்படும் போது, உபயோகப்படுத்தப்படும் பொருட்களை கொண்டு எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என தீயணைப்புத்துறையினர் மாணவிகளுக்கு விளக்கி கூறினர்.

Tags :
× RELATED செங்கோட்டையில் பேரிடர் விழிப்புணர்வு பேரணி