×

சிறுவர்களை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் பரவும் கிராமத்தில் சுகாதாரத்துறை முகாம்

மேலூர், அக். 15: மேலூர் அருகே சிறுவர்களை மட்டும் தாக்கும் மஞ்சள் காமாலை நோய் பரவும் கிராமம் குறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக சுகாதார துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முகாமிட்டு நடவடிக்கை எடுத்தனர்மமதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் கடந்த சில நாட்களாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மட்டும் குறி வைத்து மஞ்சள் காமாலை நோய் தாக்கி வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளது குறித்து நேற்று ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. அங்குள்ள சுகாதாரமற்ற சுற்றுப்புறம் மற்றும் மேல்நிலை தொட்டி நீரே நோய்க்கான காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து நேற்று சுகாதார துறையினர் தும்பைபட்டியில் முகாமிட்டு வீடு வீடாக குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கி உள்ளதா என சோதனை நடத்தினர். காய்ச்சல் பாதித்தவர்களுக்கு மாத்திரை மருந்து வழங்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி அலுவலர் பிரபு தேங்கி இருந்த சாக்கடைகளை துப்புரவு தொழிலாளிகளை கொண்டு சுத்தம் செய்தார்.மேலும் தண்ணீர் தேங்கி இருந்த பகுதியில் இருந்து அவை அப்புறப்படுத்தப்பட்டது. தண்ணீர் குளோரினேசன் செய்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags : village ,health camp ,children ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...