×

தகவல் அறியும் உரிமைத் திருவிழா

மதுரை, அக். 15: மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில், தகவல் அறியும் உரிமைத் திருவிழா, மதுரையில் நடந்தது. இதில் தகவல் அறியும் உரிமை சட்டப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எவ்வாறு தகவல்களை பெறுவது? அதற்கான வழிமுறைகள் என்ன? எப்படிப்பட்ட கேள்விகளை யாரிடம் கேட்டால், தங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம் என்பது உள்ளிட்டவைகள் விளக்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 275 பேர் தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களை எழுதுவதற்கும் பயிற்சி பெற்றனர். மேலும் அரசு இணைய சேவைகள் பற்றிய தொகுப்பு குறித்து மக்கள் விழிப்புணர்வு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் விளக்கி கூறினார். தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் தங்களின் அனுபவங்களையும், தகவல் அறியும் உரிமை பற்றியும் விளக்கி பேசினர். இதில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம், நிர்வாக அறங்காவலர் பாண்டியராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, மதுரை மத்திய காய்கறி சந்தை அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன், பொருளாளர் தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி