×

உசிலம்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

உசிலம்பட்டி, அக். 15: உசிலம்பட்டி அருகே அவரைத் தோட்டத்தில் திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி கிராமத்திற்கு உட்பட்ட மலையடிவாரப்பகுதியிலுள்ள மாயக்கண்ணன் என்பவர் தோட்டத்தில் அவரை மற்றும் காய்கறிகள் பயிரிட்டுள்ளார். இந்த தோட்டத்தில் நேற்று காய்கறிகள் பறித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 12 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நெழிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காய்கறி பறித்து கொண்டிருந்த பெண்கள் விவசாயி மாயக்கண்ணனிடம் தகவல் கொடுத்தனர். அவர் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலறிந்து வனச்சரக அலுவலர் அன்பழகன் உத்தரவில் வனவர் பாண்டியராஜன், வனக்காப்பாளர்கள் லிங்கசாமி, பாண்டியராஜன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். அதன் பின்பு தொட்டப்பநாயக்கனூர் தெற்குபீட் சந்தமலை மேற்கு ஆரப்பில் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, நேற்றுமுன்தினம் பெய்த மழையினால் தோட்டத்து அருகிலுள்ள ஓடையில் வரும் தண்ணீரில் மலையிலிருந்து மலைப்பாம்பு இழுத்து வரப்பட்டு இந்த தோட்டத்தில் இடம்பெயர்ந்து இருக்கலாம் எனத்தெரிவித்தனர்.

Tags : Usilampatti ,garden ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...