×

பழநி பகுதியில் களைக்கொல்லியால் பாதித்த நிலங்களில் வேளாண்துறையினர் ஆய்வு

பழநி, அக். 15: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி பகுதியில் களைக்கொல்லியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. பழநி அருகே கணக்கன்பட்டி, கோம்பைபட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்கர்சோளத்திற்கு அப்பகுதியில் விவசாயிகள் தனியார் நிறுவனத்தின் களைக்கொல்லி அடித்துள்ளனர். ஆனால், மக்காச்சோள பயிரை சுற்றிலும் களைகள் அதிகளவில் ஏற்பட்டன. இதுதொடர்பாக மருந்து நிறுவன விற்பனை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சுருளியப்பன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் கணக்கன்பட்டி, கோம்பைபட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். களைக்கொல்லி வீரியமில்லை என புகார் தெரிவித்த விவசாய நிலங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.பின்னர் சுருளியப்பன் கூறியதாவது, ‘விவசாய நிலங்களில் ஆய்வு செய்ததில் உரிய விகிதாச்சாரத்தில் களைக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மருந்து நிறுவன பிரதிநிதிகள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Tags : Investigation ,Palani ,area ,
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு