×

வண்டி பாதையை மறித்து அய்யலூர் வனத்துறை அராஜகம் நடவடிக்கை எடுக்க கோரி மனு

திண்டுக்கல், அக். 15: அய்யலூர் வனத்துறை அதிகாரிகள் பூர்வீக வண்டி பாதையை மறித்து அராஜகம் செய்வதாக விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி, எஸ்.புதுப்பட்டி, கோவில்பட்டி, பாண்டியனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூர்வீகமாக சென்று வரும் வண்டி பாதையை மறித்து அய்யலூர் வனத்துறை அதிகாரிகள் அராஜகம் செய்கின்றனர். மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை முழுமையாக உடைத்து விட்டனர். பயிர் செய்துள்ள நிலங்களையும் வனத்துறையினர் ஆக்கிரமித்துள்ளனர். தற்போது வீடுகளை இடித்து விடுவோம், பொய்வழக்கு போடுவோம் எனக்கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Ayalur Forest Department ,
× RELATED ஊராட்சி தலைவர் மீது பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை கோரி மனு