×

எங்க குரூப்புக்கு மட்டும் ஏன் லேப்டாப் இல்லை? அம்மையநாயக்கனூர் மாணவர்கள் கேள்வி

திண்டுக்கல், அக். 15: அம்மையநாயக்கனூர் பள்ளி மாணவர்கள் இலவச லேப்டாப் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். நிலக்கோட்டை வட்டம், அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்து விட்டு கூறுகையில், ‘எங்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 அனைத்து மாணவர்களுக்கும் அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 1ல் ஆர்ட்ஸ் குரூப்பில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கும் லேப்டாப் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : group ,Ammayanayakanur ,
× RELATED தனியார் நிறுவனத்தில் புகுந்து கேமரா, லேப்டாப் திருட்டு