×

தொடர் மழையால் கல்வராயன் மலையில் சிதிலமடைந்த சாலைகள்

ஆத்தூர், அக்.15: தொடர் மழை எதிரொலியாக கல்வராயன் மலையில் சிதிலமடைந்த சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வராயன் மலை பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்ல வசதியாக சாலைகள் அமைக்கப்பட்டன. தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இந்த சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆத்தூர் முட்டல் பகுதியில் இருந்து கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அடியனூர். கிராங்காடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்ல நீண்ட போராட்டத்திற்கு பின்பு சாலை வசதி ஏற்படுத்த்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் ஒப்புக்கு போட்டதால் தற்போது பெய்த மழையில் இந்த சாலைகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. இதனால், போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக காணப்படுகிறது.மேலும், சாலையில் மழைநீர் பெருக்கெடுப்பதால் மண் அரிப்பும் காணப்படுகிறது. அங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், சாலையில் குறுக்கே கற்கள் குவிந்து கிடப்பதாலும் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த பாதைகளை ஆய்வு செய்து மலைவாழ் மக்கள் பயன்படுத்திடும் அளவிற்கு சீர்செய்திட உள்ளாட்சி மற்றும் வனத்துறையினர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : Roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...