×

விமான நிலையத்தில் ஏடிஎம் மையம் திறப்பு

ஓமலூர், அக்.15:  தினகரன் செய்தி எதிரொலியாக சேலம் விமான நிலையத்தில் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது. ஓமலூர் அருகே காமலாபுரத்தில், விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக விமான போக்குவரத்து இல்லாமல் இருந்தது. மத்திய அரசு உதான் திட்டத்தின் மூலம், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சேலம் -சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தினகரனில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வங்கியின் தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில தலைமை பொது மேலாளர் வினய் எம்.டோன்ஸ் திறந்து வைத்தார். மேலும், ஏடிஎம் கார்டு மூலமும், யோனோ கேஷ் முறையிலும் பணம் எடுக்கும் முறையையும் துவக்கி வைத்தார். இதில், கார்டு இல்லாமலேயே ₹500 முதல் ₹20 ஆயிரம் வரை பணம் எடுக்க முடியும்.

Tags : Opening ,ATM Center ,Airport ,
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...