×

ஓமலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஓமலூர், அக்.15: ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை(16-ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஓமலூர் கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓமலூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 16ம் தேதி(நாளை) நடக்கிறது. காலை11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் நேரில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Power Consumers Meeting ,Omalur ,
× RELATED 17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்