×

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தல் ஒரே அணியை சேர்ந்த 75 பேர் செயற்குழு உறுப்பினராக வெற்றி

நாமக்கல், அக். 15: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில், நடராஜன் அணியில் போட்டியிட்ட 75 பேரும் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளனர்.நாமக்கல்லில் நேற்று முன்தினம் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், தலைவர், உபதலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் மற்றும் 75  மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 82 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் நடராஜன் மீண்டும் தலைவராக வெற்றி பெற்றார். இவரது அணியில் போட்டியிட்ட 7 பேரும் வெற்றி பெற்றனர். மேலும்,75 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்து, நேற்று மாலை தேர்தல் குழு தலைவர் சுந்தரராஜன் முடிவுகளை அறிவித்தார். அதில் நடராஜன் அணியில் போட்டியிட்ட 75 பேரும் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றனர்.

அவர்கள் பெயர் விபரம்: குழந்தைவேல், சுகுமார், கண்ணன், அண்ணாதுரை, கார்த்திக், ரமேஷ், கார்த்திகேயன், செல்வகுமார், அழகேசன், சுரேஷ், இளங்கோ, பி. செல்வகுமார், ஆனந்த், பார்த்திபன், சுந்தரம், செந்தில்குமார், அருள்குமார், செல்வராஜ், சேகர், நடராஜன், முத்துக்குமார், மணி, சங்கர், ஆர்.செந்தில்குமார், தனபால், அன்பழகன், பெரியசாமி, கணேசன், ஆர். கண்ணன், கவுசிகன், சிவக்குமார், தியாகராஜன், ஆர். செல்வராஜ், சுப்பிரமணி, பி. சுப்பிரமணியம், பழனிசாமி, பொன்னுசாமி, ஆதிகேசவன், கணபதி, சந்திரபிரகாஷ், எஸ். தனபால், சி.செல்வராஜ், தங்கமுத்து, பாலு, கருப்பண்ணன், குணசேகரன், பழனிவேல், கே. பொன்னுசாமி, தாழ முத்து, சங்கர்கணேஷ், எஸ்.எஸ் சிவக்குமார், ஜெயராஜ்,  செல்லப்பன், கோபாலகிருஷ்ணன், பூபதி, பெருமாள், துரைசாமி, சரவணன், மணிவேல், தங்கராஜ், பழனிசாமி, கதிரவன், பி.சேகர், வாசுவேதன், பி. சுப்பிரமணியன், ரகுநாதன், ரஞ்சித்குமார், பாலசுப்பிரமணியன், தேவராஜ், மோகன்குமார், ராமசாமி, ரவிச்சந்திரன், ரமேஷ், வேலுசாமி, எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர்.கடந்த 3 ஆண்டுக்கு முன் நடைபெற்ற எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலின் போது, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அப்போது தேர்தலில் போட்டியிட்ட இரண்டு அணியினரும் சமாதான முறையில் பாதி, பாதி செயற்குழு உறுப்பினர் பதவிகளை பங்கிட்டு கொண்டனர்.

ஆனால், இந்த முறை 75 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 101 பேர் போட்டியிட்டனர். இதில் நடராஜன் அணியில் போட்டியிட்ட 75 பேரும் வெற்றி பெற்றுவிட்டனர்.லாரி பார்முலாவுக்கு கிடைத்த வெற்றிகடந்த மே மாதம் நடைபெற்ற நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தேர்தலில், 50 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தலைவர் வாங்கிலி அணியில் போட்டியிட்ட 44 பேர் வெற்றி பெற்றனர். மேலும் வாங்கிலி அணியில் போட்டியிட்ட உபதலைவர், பொருளாளர், இணை செயலாளர் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு செயற்குழு உறுப்பினரும், தீவிரமாக வாக்கு சேகரித்ததால் அந்த அணியில் அனைவரும் வெற்றி பெற்றனர். தற்போது அதே பார்முலாவை பின்பற்றி எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலிலும் முன்னாள் தலைவர் நடராஜன், தனது அணியின் சார்பில் 75 செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை திரட்டினார்கள். இதனால் ஒட்டு மொத்தமாக ஒரே அணியினர் வெற்றி பெற்றுவிட்டனர்.

Tags : election team ,LPG ,Tanker Truck Owners Association ,executive committee ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்