×

கோட்டை கோயிலில் திருக்கல்யாணம்

தர்மபுரி, அக்.15: .  தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயிலில், நேற்று புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 7 மணி முதல் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து வந்த சூடிக் கொடுத்த சுடர் கொடி மாலையினை வரவேற்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு வரமகாலட்சுமி பரவாசுதேவ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம், மாலை 6.30 மணிக்கு கருடசேவையும், இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது.

Tags : Fort Temple ,
× RELATED கோட்டை கோயிலில் திருக்கல்யாணம்