×

ஊத்தங்கரையில் தமிழக ஆசிரியர் கூட்டணி கிளை செயற்குழு கூட்டம்

ஊத்தங்கரை. அக்.15:தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஊத்தங்கரை வட்டார கிளையின் செயற்குழு கூட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் நாகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் லீலாகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மத்தூர் கல்வி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ள 47 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், நவம்பர் மாதத்திற்குள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைத்து, வட்டாரக் கிளையின் சார்பில் முப்பெரும் விழா நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் அகிலாண்டேஸ்வரி, ராமாண்டவர், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார செயற்குழு உறுப்பினர் ராம்குமார் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu Teacher Alliance Branch Executive Committee Meeting ,
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு