×

கிருஷ்ணகிரியில் சீருடை பணியாளருக்கான இலவச உடற்தகுதி பயிற்சி

கிருஷ்ணகிரி, அக்.15:  கிருஷ்ணகிரியில், சீருடைப் பணியாளருக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இலவசமாக உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சீருடை பணியாளருக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இலவசமாக உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேசுகையில்,
‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். ஓட்டம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்,’ என்றார். நேற்று நடந்த பயிற்சியில் 14 மாணவிகள் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர்.

Tags : Personnel ,Krishnagiri ,
× RELATED தேனி மாவட்டம் வண்ணாத்திபாறை வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் தீ..!!