×

அரசு கல்லூரியில் தகுதி தேர்வு பயிற்சி முகாம்

தர்மபுரி, அக்.15: தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் தேசிய, மாநில அளவிலான தகுதி தேர்வு பயிற்சி முகாம் நடந்தது. தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில், தேசிய, மாநில அளவிலான தகுதி தேர்வு பயிற்சி முகாம், அண்ணா நூற்றாண்டு கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொ) பாக்கியமணி தலைமை வகித்தார். ஆங்கில துறைத்தலைவர் தேன்மொழி வரவேற்றார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர்கள் சத்யா, குமார் முன்னிலை வகித்தனர். திருச்சி நேஷனல் கல்லூரி ஆங்கில துறை இணை பேராசிரியர் பெனட், புதுவை பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் மார்ஸ் ஆகியோர், தேசிய மற்றும் மாநில தகுதி தேர்வுக்கான பயிற்சியை வழங்கினர். இப்பயிற்சியில் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பர்கூர், நாமக்கல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Tags : Eligibility Test Training Camp ,Government College ,
× RELATED கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை...