முன்விரோதம் காரணமாக பசுமாட்டிற்கு விஷம்

கொடுத்து கொலைபாப்பிரெட்டிப்பட்டி, அக்.15:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி சக்திவேல்(46). இவர், பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மாடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, ஒரு பசு மாடு மட்டும் மர்மமான முறையில் இறந்துகிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல், பள்ளிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சக்திவேலின் அண்ணன் ராமசாமி, முன்விரோதம் காரணமாக, மாட்டிற்கு தீவனத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>