×

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் திமுக எம்பி நன்றி தெரிவிப்பு

தர்மபுரி, அக்.15: தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கொடியேற்று விழா நடந்தது. இதில் தடங்கம், ஏ.ஜெட்டிஅள்ளி,  மாதேமங்கலம், மிட்டா தின்னஅள்ளி,  மிட்டா ரெட்டிஅள்ளி, நார்த்தம்பட்டி, லளிகம், பூதனள்ளி, நல்லம்பள்ளி, சிவாடி, பாகலள்ளி, பாளையம்புதூர், மானிய தள்ளி, அதியமான் கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு  உட்பட்ட 75 இடங்களில் நடந்த திமுக கொடியேற்றும் விழாவில், தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலும், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏலகிரி நடராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Nallampalli Union ,
× RELATED மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக...