×

வாங்கப்பாளையத்தில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர், அக். 15: வாங்கப்பாளையத்தில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கினர்.கரூர் மாவட்ட பாஜக சார்பு அமைப்புகளின் சார்பில் நிர்வாகிகள் வழங்கிய மனுக்களில் தெரிவித்துள்ளதாவது:கரூர் வாங்கப்பாளையத்தில் இறைச்சி கடைகள் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை தெருநாய்கள் தின்று விட்டு சுற்றித்திரிகின்றன. இறைச்சி கழிவுகளை தின்பதால் வெறி பிடித்த நிலையில் சுற்றித்திரியும் நாய்களால் பல்வேறு தரப்பினர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த கோரிக்கை குறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதே போல் வாங்கப்பாளையம் முன்பு கரூர் நகராட்சி 11வது வார்டு வாக்குச்சாவடி எண் 68 ஆக இருந்தது. தற்போது கரூர் நகராட்சி நான்காவது வார்டு வாக்குச்சாவடி எண் 1 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எல்லா தேர்தல்களிலும் மிக அருகில் உள்ள வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்து வந்தோம். ஆனால், தற்போத விவிஜி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றி விட்டார்கள். இந்த வாக்குச்சாவடி தொலைவில் உள்ளது. எனவே அருகில் உள்ள வாங்கப்பாளையம் வாக்குச்சாவடிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றி அமைக்காத பட்சத்தில் நாங்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம், தேர்தலை புறக்கணிப்போம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.பொம்மை லாரியில் மணல்ஏற்றி வந்து கோரிக்கை மனு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த அமிர்தானந்தம் என்பவர் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் மணல் திருட்டினை தடுக்க கோரி பலமுறை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மணல் கொட்டப்பட்ட பொம்மை லாரியை இழுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்க வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் பொம்மை லாரியுடன் உள்ளே வரக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து, பொம்மை லாரியை கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் வைத்து விட்டு கோரிக்கை சம்பந்தமாக மனு கொடுக்க சென்றார். இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






Tags : collector ,office ,buyer ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...