×

கரூர் பாரதி நகர் முதல் தெருவில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர், அக். 15: தேங்கிக்கிடக்கும் குப்பையால் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஒருமுறைமட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் கூட இதனை அமல்படுத்திவரும் நிலையில் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் கண்டுகொள்ளாத போக்கு தொடர்கிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் நகராட்சி சுகாதார பிரிவினர் இதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படுவதில்லை. விளைவு தாரளாமாக புழங்க ஆரம்பித்து விட்டது.கரூர் கோவை சாலை அருகே உள்ள பாரதி நகர் முதல் தெருவில் பிளாஸ்டிக்பொருட்கள் அதிக அளவில் குப்பையோடு கலந்து கிடக்கிறது. நீண்ட நாட்களாக குப்பையை அகற்றாததால் இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியும் நிரம்பி வழிகிறது. தொட்டி அருகே சாலையோரம் குப்பைகள் குவியலாக நாள் கணக்கில் கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது என குடியிருப்போர் புகார் தெரிவிக்கின்றனர். சுகாதார பிரிவினர் எதையும் கண்டுகொள்வதில்லை. குப்பையை அகற்றுவதும் இல்லை. புகார் தெரிவிக்க புகார் எண்ணும் தருவதில்லை. குப்பை மேலாண்மை திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Karur Bharathi Nagar Health Street ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...