×

குறை தீர்க்கும் நாள் கூட்டம் பொதுமக்கள் கூட்டம் குறைந்ததால் வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்

கரூர், அக். 15: தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் குறைவான அளவிலான மக்களே மனு கொடுக்க வந்தனர்.வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக ஏராளமானோர் மனு கொடுத்துச் சென்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வழக்கத்தை விட மிகவும் குறைவான மக்களே வந்து மனு கொடுத்துச் சென்றனர். வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மேலும், மாவட்டம் முழுதும் ஒரளவு மழை பெய்துள்ளது. இதனால், விவசாய பணிகளிலும் அதிகளவு பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாய பணி மற்றும் தீபாவளி பண்டிகை போன்ற காரணங்களால் நேற்று நடந்த குறைதீர் நாள் கூட்டத்துக்கு மக்கள் வரத்து குறைவாக இருந்ததால் கலெக்டர் அலுவலகம் வழக்கமான பரபரப்பின்றி காணப்பட்டது.வெறிச்சோடி காணப்பட்டது.Tags : Grievance Day Meeting ,
× RELATED தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்