×

தேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் மாணவர்கள் சாதனை

திருப்பூர்,  அக். 15: தேசிய அளவிலான ஸ்கிப்பிங் போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டி போபால் மத்திய பிரதேசத்தில்  கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழ்நாடு அணியின்  சார்பாக 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளியை  சேர்ந்த மாணவர்கள் தீபக் மற்றும் பாரதிகண்ணன் ஆகிய இருவரும் தமிழக  அணிக்காக பங்கு பெற்றனர். இதில், தனிநபர் பிரிவில் 4 பதக்கங்களையும், குழு  போட்டியில் 14 பதக்கங்களையும் வென்றனர். மாணவன் தீபக் குழு தொடர்  போட்டியில் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும், அகில  இந்திய அளவில் 14ம் இடத்தையும், பாரதிகண்ணன் ஸ்பீட்ஸ்ப்ரின்ட் போட்டியில்  4ம் இடத்தையும் பிடித்து தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமையை  சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவசாமி,  பள்ளியின் செயலாளர் சிவகாமி, இயக்குனர்கள் சக்திநந்தன், வைஷ்ணவி மற்றும்  பள்ளி முதல்வர் வசந்தரான் ஆகியோர் பாராட்டினர்.

Tags :
× RELATED நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் சாதனை