×

வங்கிகள் இணைப்பை கண்டித்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கோவை, அக்.15:வங்கிகள் இணைப்பு என்ற பெயரில் பல்வேறு வங்கிகள் மூடப்பட்டுவதாக கூறி கோவையில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4ஆக சுருக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வங்கிகள் இணைப்பால் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்படும் என்றும், புதிய வேலை வாய்ப்புகள் பறிக்கப்படும் என்றும் குற்றம்சாட்டும் வங்கி ஊழியர்கள், நாடு முழுவதிலும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் கோவை  மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில்  50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு வங்கிகள் இணைப்பு என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும், வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

-

Tags :
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது