×

கோட்டை பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.13 லட்சம்

ஈரோடு, அக். 15:  ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி உண்டியலில் புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் சேர்த்து ரூ.2.13 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில், புரட்டாசி மாத விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சனிக்கிழமை பெருமாளை வழிபடுவர். இதனால், கடந்த 4 வார சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதில், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டு சென்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று ஸ்ரீவாரி உண்டியல் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியல்களில் கடந்த 4 வார சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 154 செலுத்தி இருந்தனர். மேலும், அர்ச்சனை டிக்கெட் ரூ.13,154, சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 575, திருவிழா நன்கொடை ரூ.78800, கருட சேவை உள்ளிட்டவைகளில் ரூ.2 லட்சத்து 66ஆயிரம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 109 வசூல் ஆகி உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Undial Tribute ,Fort Perumal Temple ,
× RELATED சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு