×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 373 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, அக்.15: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 373 மனுக்கள் வரப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். மேலும், இக் கூட்டத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்கள் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், வருவாய்த்துறை திட்ட முகாம்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், அந்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.  கூட்டத்தில் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து கஸ்தூரிபா நிகேதன் ஒருங்கிணைந்த வளாக இல்லத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பிக்கும் பொருட்டு இலவச தையல் இயந்திரங்களையும், ஒரு பயனாளிக்கு சலவை பெட்டியையும் கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

வேளாண் துறையில் பணிபுரிந்து இறந்து போன சரவணமுருகன் மனைவி ஜெயந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் தட்டச்சர் ஆக பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கினார். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப கால பயிற்சி மையம், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட 46 சிறப்பு குழந்தைகளை மேட்டுப்பாளையம் ராமாயணம் தீம் பார்க்கிற்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான வாகனத்தினை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.





-

Tags : Ombudsman ,
× RELATED பல்கலைக்கழகங்களில் வரும் 31ம்...