×

மயங்கி விழுந்து செக்யூரிட்டி பலி

ஈரோடு, அக்.15:ஈரோடு கொல்லம்பாளையம், தங்கமணி வீதியை சேர்ந்தவர் மனோகரன் (60). இவர், ஈரோடு திண்டல்மேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனோகரன் 1010 நெசவாளர் காலனியில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED என்எஸ்ஜி உட்பட ‘தலை’ இன்றி தவிக்கும் 4 பாதுகாப்பு படைகள்