×

அகில இந்திய சைனிக் முகாம் தமிழ்நாடு என்சிசி வீரர்கள் முதலிடம்

சென்னை:  விசாகபட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய சைனிக் முகாமில் தமிழ்நாடு என்சிசி வீரர்கள் முதலிடம் பிடித்தனர். தேசி மாணவர் படை மாணவர்களுக்கான அகில இந்திய சைனிக் முகாம் அக்டோபர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் உள்ள 17 என்சிசி இயக்குநரகத்தைச் சேர்ந்த 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு இயக்குநகரத்தின் கடற்படை பிரிவைச் சேர்ந்த 36 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம்  உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.  

இந்நிலையில் இவர்களுக்கான பாராட்டு விழா சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள கடற்படை பிரிவில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்சிசி இயக்குனர் மலாய் கே குர்தி, குரூப் காமண்டர் ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,NCC ,camp ,Army ,India ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...