×

குறுகிய சாலையில் முந்திச் சென்றபோது மாநகர பேருந்து மோதி மளிகை வியாபாரி பலி

சென்னை: சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (52). மளிகை வியாபாரி. இவர், நேற்று மதியம் தொழில் நிமித்தமாக தனது பைக்கில், வடபழனியில் இருந்து அசோக் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடபழனி பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற மாநகர பேருந்தை (த.எ.570 ஜி) மகேந்திரன் முந்திச்செல்ல முயன்றார். ஆனால், அந்த சாலை குறுகிய நிலையில் இருந்ததால், அங்குள்ள கோயில் சுவர் மீது மோதாமல் இருக்க அவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது அவரது பைக் கோயில் சுவரில் மோதியதால், நிலை தடுமாறிய மகேந்திரன், கீழே விழுந்தார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : grocery dealer ,
× RELATED பஸ் மோதி விவசாயி பலி