×

திருமணம் செய்வதாக கூறி ஐஏஎஸ் அதிகாரியின் மகளை ஏமாற்றிய தொழிலதிபர் மகனுக்கு போலீஸ் வலை

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன், பிளஸ் 2  படிப்பை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்தார். அப்போது, அதே பள்ளியில் பயின்ற அண்ணாநகர் டி- செக்டார் 7வது தெருவை சேர்ந்த தொழிலதிபரின் மகன் இர்பான் (21) என்பவர், ஐஏஎஸ் அதிகாரியின் மகளுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். பள்ளி படிப்பு முடிந்தும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இர்பான் தற்போது வண்டலூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர், ஐஏஎஸ் அதிகாரி மகளை திருமணம் செய்வதாக கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஏஎஸ் அதிகாரியின் மகள் கேட்டபோது, ‘நான் நட்பாகத்தான் பழகினேன். உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது,’ என்று இர்பான் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள், சம்பவம் குறித்து கடந்த 12ம் தேதி தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமாரை நேரில் சந்தித்து, உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, நேற்று முன்தினம் மாலை இர்பானை பிடித்து விசாரித்தபோது, ஐஏஎஸ் அதிகாரியின் மகளை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து ெசன்று, இருவரும் நெருக்கமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். பிறகு மேல் விசாரணைக்காக நேற்று ஆஜராக வேண்டும் என்று இர்பான் பெற்றோரிடம் போலீசார் எழுதி வாங்கி கொண்டு இர்பானை அனுப்பி வைத்தனர். ஆனால் சொன்னப்படி நேற்று காவல் நிலையத்தில் இர்பான் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இர்பான் மீது ஐபிசி 417, 420, 406, 506(i),  மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துண்புறுத்தல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Tags : Businessman ,IAS officer ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்