×

அச்சன்புதூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

செங்கோட்டை, அக். 15:  நெல்லை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், விவேகானந்தா கேந்திரம், அச்சன்புதூர் பூஜா சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், அச்சன்புதூரில் நடந்தது. ஓய்வுபெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் திருவேங்கடம் தலைமை வகித்தார். இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் வாசுதேவன் வரவேற்றார்.  பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி குத்துவிளக்கேற்றினார். அச்சன்புதூர் போலீஸ் எஸ்ஐ சங்கரன், முகாமை தொடங்கி வைத்தார். விவேகானந்தா கேந்திர இணை அமைப்பாளர் வேல்ராஜ் வாழ்த்திப் பேசினார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் காவியா,  திவ்யா, ஜேக்கப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். 46 பேருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது. கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக 15 பேர், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 21 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.


Tags : Free Eye Treatment Camp ,
× RELATED விளாத்திகுளம் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்