×

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு

வி.கே.புரம், அக். 15:  ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம், வி.கே.புரத்தில் நடந்தது. மாநில தலைவர் சீனி ராமானுஜம் தலைமை வகித்தார். நெல்லை மாவட்டத் தலைவர் இளையபெருமாள் வரவேற்றார். விருதுநகர் மாவட்டத் தலைவர் முத்துசாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாநில செயலாளர் ஹரிஹரன் மாநில வரவு-செலவு கணக்குகளை வாசித்தார்.கூட்டத்தில் சங்கத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் நிலை பற்றியும், வருங்காலத்தில் சங்க நிலைப்பாடு குறித்தும் மாநில நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மாநில பொருளாளர் சவுந்திரபாண்டியன் வருங்காலத்தில் வழக்கு எண் 216ஐ எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கினார். கூட்டத்தில் மகளிரணி மாநில பொறுப்பாளர் வெங்கட்டம்மாள், நெல்லை மாவட்ட ஆர்டிஏ உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, சங்கர சிந்தாமணி, செந்தூர்பாண்டி, ஆறுமுகம், துரைராஜ், முருகன், அந்தோணி ஞானபிரகாசி, சாகுல்ஹமீது உடற்கல்வி இயக்குநர் ஜெயராமன், முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன், அழகுசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் செண்பகம் நன்றி கூறினார்.

Tags : Teachers Union State Executive ,
× RELATED பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் மீட்பு