×

காங். மூத்த தலைவரை சந்தித்த எம்பிக்கள்

கடையம், அக். 15:  கடையத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரை எம்பிக்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். தெற்கு கடையம் ஊராட்சி முன்னாள் தலைவரும், காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான நிலக்கிழார் கோமதிநாயகம்(81). இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை மற்றும் நெல்லை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வில் உள்ளார். அவரை தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் திருநாவுக்கரசு, டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்பி தனுஷ்கோடிஆதித்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். தொடர்ந்து அவரது மகன் சண்முகத்திடம் நலம் விசாரித்தனர். கோமதிநாயகத்திடம் விரைவில் உடல் நலம் பெற ஆறுதல் கூறினர். இதில் கோமதிநாயகம்பிள்ளை மனைவி விஜயலட்சுமி, மகள் கீதா, மாநில மாணவரணி துணை தலைவர் மாரிகுமார், கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : MPs ,senior leader ,
× RELATED ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிப்பார்: காங்....