×

பொன்னமராவதியில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு செயல்விளக்கம்

பொன்னமராவதி, அக்.15: பொன்னமராவதியில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு முகாம் மற்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பொன்னமராவதி வலம்புரியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தீத்தடுப்பு , இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது. சிலிண்டர் உபயோகிக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தீவிபத்துகளை அணைப்பது, இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு தீவிபத்துக்களை அணைப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மாணவர்களுக்கும் செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியில் துணை தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் ஜோதி, உதவிதலைமையாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர் வெங்கட்ராமன், கிராமநிர்வாக அலுவலர்கள் ரமேஷ், ஹேமலதா, பாண்டியன், ஆரோக்கியராஜ், ராஜேந்திரன், பச்சையப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மரவாமதுரை ஊராட்சி சங்கம்பட்டி, ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி ஆகிய நீர்பிடி கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : mitigation demonstration ,
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது