×

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 235 படைப்புகள் இடம் பெற்றன

அறந்தாங்கி,அக்.15: அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் 235 படைப்புகள் இடம் பெற்றன.
அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கண்காட்சிக்கு அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி கலந்து கொண்டு, கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டார். அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகிலா, அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கண்காட்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 89 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் 235 படைப்புகள் இடம் பெற்றன.
வல்லத்திராக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன் வரவேற்றார். அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

Tags : Aranthangi Educational District Science Fair ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு