×

ஆவுடையார்கோவிலில் தரமான நெல்விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

அறந்தாங்கி,அக்.15: ஆவுடையார்கோவில் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் 2019-20ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தரமான நெல்விதை உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து வீரமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆவுடையார்கோவில் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி வேளாண்மைத்துறையின் மூலம் தற்பொழுது செயல்படுத்தப்படுத்தி வரும் உழவு மானியம், பிரதம மந்திரியின் ஓய்வூதியத்திட்டம் மற்றும் அட்மா திட்டம் பற்றி எடுத்து கூறினார்.வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வருகை புரிந்த உழவியல் உதவி பேராசிரியர் டாக்டர் பிரபுகுமார் வயல்தேர்வு, விதைதேர்வு, விதை நேர்த்தி, களை நிர்வாகம் பற்றிய புதிய தொழில்நுட்பங்களை எடுத்து கூறினார்.

அறந்தாங்கி விதை சான்று அலுவலர் இளஞ்செழியன் விதைச் சான்று நடைமுறைகள் மற்றும் தரமான நெல்விதை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர்அலி இப்பயிற்சி ஏற்பாடுகள் செய்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags :
× RELATED புதுகை, பரம்பூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை