×

கட்டுமாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?

அறந்தாங்கி, அக்.15: கட்டுமாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது கட்டுமாவடி. இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவற்றில் அதிக உயரம் கொண்ட கண்டெய்னர், ஆம்னி பஸ்களும் அடங்கும். கட்டுமாவடிக்கும் காரக்கோட்டை பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. லேசான காற்று வீசினாலே கீழே விழும் நிலையில் அந்த மின்கம்பம் உள்ளது.

வாகனங்கள் செல்லும் போது மின்கம்பம் கீழே விழுந்தால், மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது உள்ள நிலையில் மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்வயர்கள், உயரமான வாகனங்களில் உரசும் நிலையில் உள்ளது. இதனாலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கட்டுமாவடி அருகே சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Katumavadi ,East Coast Road ,
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்