×

நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருத்தணி, அக். 15: திருவாலங்காட்டில், நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடந்தாண்டு கரும்பு அரவைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு, ₹ 22 கோடிக்கு பில் தொகை வழங்க வேண்டும். விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், ஆலை நிர்வாகம் நிலுவை தொகையை வழங்காமல் மெத்தனம் காட்டி வந்தது.

இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கக்கோரி ஆலையின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாலையில், கரும்பு விவசாயிகளை ஆலை நிர்வாகம் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதில், ‘ஒரு வாரத்தில் நிலுவை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Sugarcane farmers ,
× RELATED விடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்